ட்விட்டர் ஊழியர்கள் நிரந்தரமாக வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதி

0 2454

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ட்விட்டர் நிறுவனம் தனது ஊழியர்கள் நிரந்தரமாக வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பை வழங்கி உள்ளது.

நோய் பரவலை தடுக்கும் பொருட்டு கிட்டத்தட்ட 5,000 ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதை கட்டாயமாக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ட்விட்டர் ஒன்றாகும். இந்த நிலையில், ஊழியர்கள் தங்களது அனைத்து அலுவலக பணிகளையும் வீட்டிலிருந்தபடியே செய்யமுடியும் என்பதை கடந்த சில மாதங்களில் நிரூபித்துள்ளதால் வரும் காலங்களிலும் இதை தொடர விரும்புவதாக ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பால் செப்டம்பர் மாதத்துக்கு முன்பு அலுவலகங்களை திறக்கும் திட்டமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments