அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இரு பணிநேர முறையை ஒரு பணிநேர முறைக்கு மாற்ற உயர்கல்வித்துறை முடிவு
தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இரு பணிநேர முறையை ஒரு பணிநேர முறைக்கு மாற்ற உயர்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் 114 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
இவற்றில் 65-க்கு மேற்பட்ட கல்லூரிகளில் காலை மாலை என்று இரு பணி நேர முறை பின்பற்றப்பட்டு வருகின்றது. காலைப் பணிநேர வகுப்புகள் எட்டே முக்கால் மணிக்குத் தொடங்கிப் பிற்பகல் ஒன்றேகால் மணிக்கு முடிவடைகின்றன.
மாலைப் பணிநேர வகுப்புகள் பிற்பகல் ஒன்றரை மணிக்குத் தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடைகின்றன. காலை நேர வகுப்புகளில் நிரந்தரப் பேராசிரியர்கள் பணிபுரிகின்றனர்.
மாலை நேர வகுப்புகளில் 1661 கவுரவ விரிவுரையாளர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இரு பணி நேர முறையை மாற்றிவிட்டு ஒரு பணி நேரத்தை மட்டும் செயல்படுத்த உயர்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. புதிய பணிநேரத்தின்படி பகல் 10 மணிக்குத் தொடங்கும் வகுப்புகள் மாலை 4 மணிக்கு முடிவடையும்.
Comments