சீனாவில் இருந்து கடந்த 20 ஆண்டுகளில் 5 தொற்று நோய்கள் பரவியுள்ளன-அமெரிக்க அதிகாரி குற்றச்சாட்டு
சீனாவில் இருந்து கடந்த இருபதாண்டுகளில் 5 கொள்ளை நோய்கள் பரவியுள்ளதாக அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டனில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனாவால் உலக நாடுகளில் 2 லட்சத்து 90 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்ததற்குச் சீனா தான் பொறுப்பேற்க வேண்டும் எனத் தெரிவித்தார். சீனாவின் ஊகானில் இருந்து தான் கொரோனா வைரஸ் பரவியதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
கடந்த 20 ஆண்டுகளில் சார்ஸ், பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், கொரோனா உள்ளிட்ட 5 கொள்ளை நோய்கள் சீனாவில் இருந்து பரவியதாகக் குறிப்பிட்டார்.
கொரோனாவைக் கட்டுப்படுத்த மருத்துவ வல்லுநர்களை அனுப்ப அமெரிக்கா முன்வந்தபோது, அதை ஏற்கச் சீனா மறுத்துவிட்டதையும் ராபர்ட் ஓ பிரையன் குறிப்பிட்டார். சீனாவில் இருந்து தான் கொரோனா வைரஸ் பரவியது என்பதற்கான சான்றுகளை அமெரிக்கா தேடி வருவதாகவும் தெரிவித்தார்.
Comments