ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 828ஆக அதிகரிப்பு

0 1368

சென்னையில் கொரோனா மையமாக திகழும் ராயபுரம் மண்டலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 828ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக சென்னை திகழுகிறது. சென்னையிலுள்ள 15 மண்டலங்களிலும் இதுவரை கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 882ஆக உயர்ந்துள்ளது.

15 மண்டலங்களில், ராயபுரத்தில் அதிகபட்சமாக 828 பேருக்கு நோய் தொற்று உறுதியாகியுள்ளது. ராயபுரத்துக்கு அடுத்து கோடம்பாக்கம் மண்டலத்தில் 796 பேரும், திரு.வி.க நகரில் 622 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் 4 ஆயிரத்து 12 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை மருத்துவ சிகிச்சையில் 814 பேர் குணமடைந்துள்ளனர். இதுதவிர்த்து, கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி 38 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 10 பேர் பலியாகியுள்ளனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments