ராஜஸ்தான் மாநிலத்தில் பயிர்களை அழிக்கும் வெட்டுக்கிளிகள்
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில் வெட்டுக் கிளிகள் தாக்குதலால் விவசாய பயிர்கள் பெரும் அழிவை சந்தித்து வருகின்றன.
அண்டை நாடான பாகிஸ்தானில் வெட்டுக்கிளிகள் பெரும் சேதத்தை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்துக்குள்ளும் அவை ஊடுருவியுள்ளன.
அஜ்மீர் மாவட்டத்தில் விவசாய நிலத்துக்குள் புகுந்துள்ள வெட்டுக்கிளிகள் கண்ணில் தென்பட்ட பயிர்கள் அனைத்தையும் தின்று வருகின்றன. இதனால் அங்கு பெரும் பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. வெட்டுக்கிளிகள் குறித்த தகவலின்பேரில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து, பூச்சிக் கொல்லி மருந்தை தெளித்து அவைகளை அழிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
Comments