தனிமைப்படுத்தும் மையங்களாக கல்லூரிகள் இருப்பதால் செமஸ்டர் தேர்வு குறித்து தற்போதைக்கு எந்த முடிவும் எடுக்கவில்லை -உயர்கல்வித்துறை அமைச்சர்

0 2957

கல்லூரிகள் தனிமைப்படுத்துதல் மையங்களாக செயல்பட்டு வருவதால் செமஸ்டர் தேர்வு குறித்து தற்போதைக்கு எந்த முடிவும் எடுக்கவில்லை என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகள் மற்றும் தொழில்நுடப கல்லூரிகளில் பருவத் தேர்வு நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற பின் பேசிய அமைச்சர் அன்பழகன், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியதும் பொறியியல் கலந்தாய்வுக்கான அட்டவணை வெளியிடப்படும் என தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments