பொதுமுடக்கத்தால் ஏற்பட்ட பொருளாதார தேக்கங்கள் பற்றி நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழு ஆய்வு
நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட தாக்கங்கள் குறித்து நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு ஆய்வு செய்யவுள்ளது.
இது தொடர்பாக பேசிய அதீர் ரஞ்சன் சௌத்ரி,பொது முடக்கத்தால் ஏற்பட்ட வேலையிழப்பை எதிர்கொள்ள மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யப்படும் என்றார்.
கொரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளையும் நாடாளுமன்றக் குழு விரிவாக ஆராயவுள்ளதாகவும் தெரிவித்தார். தேவை ஏற்பட்டால் நாடாளுமன்றக் குழு முன் ஆஜராகி விளக்கமளிக்குமாறு அரசு அதிகாரிகள், இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவில் மொத்தம் 22 எம்.பி.க்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments