வனவாசம் முடிந்து விமானத்தில் வீடு திரும்பிய இந்தியர்கள்

0 1399
ஊரடங்கு அறிவிக்கப்பட்டபின் விமானங்கள் இல்லாததால் வெளிநாடுகளில் சிக்கியிருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் தாயகம் திரும்பியுள்ளனர்.

ஊரடங்கு அறிவிக்கப்பட்டபின் விமானங்கள் இல்லாததால் வெளிநாடுகளில் சிக்கியிருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் தாயகம் திரும்பியுள்ளனர்.

மலேசிய நாட்டின் கோலாலம்பூரில் இருந்து 225 இந்தியர்களை அழைத்து வந்த ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம் இன்று அதிகாலை மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமானநிலையத்தை வந்தடைந்தது. அங்கு வந்து இறங்கிய பயணிகளுக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது. பயணிகள் அனைவரும் 14 நாட்களுக்கு தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 இதனிடையே வங்காள தேச தலைநகர் டாக்காவில் இருந்து 169 மருத்துவ மாணவர்களை அழைத்து வந்த ஏர் இந்தியா சிறப்பு விமானம் ஸ்ரீநகருக்கு வந்து சேர்ந்தது. இந்திய தூதரகம் மிகுந்த உதவிகளை செய்ததாக கூறிய மாணவர்கள் மீண்டும் தாய்நாட்டுக்கு அழைத்து வந்ததற்கு மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

 கத்தார் தலைநகர் தோஹாவில் இருந்து இந்தியர்களை ஏற்றிக் கொண்டு ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம் கேரளாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தை வந்து அடைந்தது. விமான நிலையத்தில் பயணிகளின் உடல் வெப்பம் பரிசோதிக்கப்பட்டது. அவர்களில் பாதிப்பு இல்லாதவர்களையும் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டது. இன்னொரு விமானம் சிங்கப்பூரில் இருந்து 135 இந்தியர்களுடன் கொச்சி விமானநிலையத்தை வந்தடைந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments