உலகிலேயே கொரோனா உயிரிழப்பு விகிதம் இந்தியாவில்தான் குறைவு: மத்திய சுகாதாரத் துறை அமைச்சர்
உலகிலேயே கொரோனா நோய்க்கு உயிரிழப்போர் விகிதம் இந்தியாவில்தான் மிக குறைவு உள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில் இந்தியாவில் கொரோனா நோயிலிருந்து குணமாவோரின் விகிதம் நாள்தோறும் அதிகரித்து வருவதாகவும், தற்போது அந்த விகிதம் 31 புள்ளி 7 சதவீதமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதேபோல் உலகம் முழுவதும் கொரோனாவுக்கு உயிரிழப்போர் விகிதம் 7 சதவீதத்தில் இருந்து 7 புள்ளி 5 சதவீதம் வரை உள்ளதாகவும், ஆனால் இந்தியாவில் அந்த விகிதம் 3 புள்ளி 2 சதவீதம் என்று குறைவான அளவிலேயே இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்தியாவின் சில மாநிலங்களில் உயிரிழப்பு விகிதமானது 3 புள்ளி 2 சதவீதத்தை விட குறைவாகவே உள்ளதென்றும் ஹர்ஷ்வர்த்தன்
Comments