கோவில் அர்ச்சகர்களுக்கு மேலும், தலா ரூ.1,000 நிவாரணம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

0 4336

திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள் உள்ளிட்டோருக்கு மேலும் ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், திருக்கோவில்களில் பங்குத்தொகை அல்லது தட்டுக்காணிக்கை மட்டுமே பெறும் 2108 அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகளுக்கும், ஒரு கால பூஜை நிதியுதவி பெறும் திருக்கோவில்களில் பணிபுரியும் 8340 அர்ச்சகர்கள் உள்ளிட்டோருக்கும், ஊதியமின்றி பங்குத்தொகை மட்டுமே பெற்றுக் கொண்டு பணிபுரியும் நாவிதர், பண்டாரம் போன்ற பணியாளர்களுக்கும் ஏற்கனவே ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டு விட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு மேலும் ஆயிரம் ரூபாய் நிவாரண தொகை திருக்கோவில் நிதியில் இருந்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. GFX OUT

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments