பொதுத்துறை வங்கிகள் கடந்த 2 மாதங்களில் ரூ.6 லட்சம் கோடி கடன் வழங்கியுள்ளன-நிர்மலா சீதாராமன்
சிறு, குறு, நடுத்தர தொழில்துறை உட்பட, பல்வேறு துறையினருக்கு பொதுத்துறை வங்கிகள் கடந்த 2 மாதங்களில் சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கியிருப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சிறுகுறு நடுத்தர தொழில்துறைகள், சில்லறை வர்த்தகம், விவசாயம் மற்றும் கார்ப்பரேட் உள்ளிட்ட துறைகளை சேர்ந்த 46.75 லட்சம் கணக்குகளுக்கு, 5.95 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டிருப்பதாக ட்விட்டர் பதிவில் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார். மார்ச் 1-க்கும் மே 8-க்கும் இடைப்பட்ட இந்த காலத்தில், வங்கியல்லாத நிதி நிறுவனங்களுக்கு 1.18 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.
அவசரக் கடன் மற்றும் செயல் மூலதன மேம்பாட்டுக் கடன் பெற தகுதி பெற்றவர்களில் 97 சதவீதம் பேரை, மார்ச் 20-க்கும் மே 8-க்கும் இடைப்பட்ட காலத்தில், பொதுத்துறை வங்கிகள் தொடர்பு கொண்டு, 65 ஆயிரத்து 879 கோடி ரூபாய் கடன் வழங்கியிருப்பதாகவும் மத்திய நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
Comments