முன்பதிவு தொடங்கிய முதல் நாளில் 45 ஆயிரத்திற்கும் அதிகமான ரயில் டிக்கெட்டுகள் விற்பனை
ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய முதல் நாளில் 45 ஆயிரத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனையாகி இருக்கின்றன.
கொரோனா அச்சுறுத்தலால் மார்ச் 22 ஆம் தேதி பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று முதல் படிப்படியாக தொடங்கப்படுகிறது. டெல்லியில் இருந்து சென்னை, திருவனந்தபுரம் உள்பட நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு 15 ரயில்களை இரு மார்க்கத்திலும் இன்று முதல் ரயில்வே இயக்குகிறது.
நேற்று மாலை டிக்கெட் முன்பதிவு தொடங்கிய நிலையில், முதல் நாளில் 45 ஆயிரத்து 533 டிக்கெட்டுகள் விற்பனையாகி உள்ளன. அதன் மூலம் 16 கோடியே 15 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக ரயில்வே மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அனைத்து டிக்கெட்களும் ஆன்லைனில் மட்டுமே வழங்கப்படுகின்றன. தத்கல், பிரிமியம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவில்லை.
Comments