கொரோனாவால் இதர நாடுகளை உற்று நோக்கும் சர்வதேச நிறுவனங்கள்...தமிழகம் தயாராக வேண்டும்

0 3388

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல சர்வதேச நிறுவனங்கள் சீனாவுக்கு மாற்றாக இதர நாடுகளில் முதலீடுகளை செய்ய திட்டமிட்டுள்ளதால், அவற்றை ஈர்க்கும் வகையில் தமிழகம் தயாராக வேண்டும் என, தமிழக தொழிற் துறையினர் அரசை கேட்டுக் கொண்டுள்ளனர்.

உற்பத்தி தொழிற்துறை குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா நடத்திய இணையதள கருத்தரங்கில் பேசிய தமிழக முன்னணி தொழிலதிபர்கள், இதற்கான கட்டமைப்பு வசதிகள் மற்றும் தொழிலாளர்களுக்கான குடியிருப்புகள் நிறைந்த தொழிற் பூங்காக்களை தமிழக அரசு நிறுவினால் சர்வதேச முதலீட்டாளர்களை எளிதில் கவர முடியும் என ஆலோசனை தெரிவித்துள்ளனர். எ

லக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் தமிழகம் நாட்டிலேயே இரண்டாவது இடத்தில் இருப்பதை சுட்டிக்காட்டிய முன்னணி மின்னணுவியல் நிறுவனமான Salcomp ன் நிர்வாக இயக்குநர் சசிகுமார் கெந்தம், இந்த துறையில் கோடிக்கணக்கான வெளிநாட்டு முதலீடுகளை இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஈர்க்க முடியும் என கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments