வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்க்க சலுகைகளை அறிவிக்கலாம்... தமிழக அரசுக்கு தொழில் நிறுவன தலைவர்கள் அளிக்கும் பரிந்துரை

0 1130

கொரோனாவை தொடர்ந்து சீனாவில் இருந்து வெளியேற நினைக்கும் சர்வதேச நிறுவனங்களை ஈர்க்க அரசு எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை தொழிற்துறையினர் பட்டியலிட்டுள்ளனர்.

அதன்படி வாகனங்களுக்கான ஜிஎஸ்டி யை 28 ல் 18 சதவிகிதமாக குறைக்க முயற்சிக்க வேண்டும். சீனாவுக்கு மாற்றாக இந்தியாவை நோக்கும் நிறுவனங்களுக்கு கவர்ச்சிகரமான ஊக்கத் திட்டங்களை அறிவிக்கலாம். இந்த நிறுவனங்களின் மூலதன செலவுக்கு மானிய வட்டியுடன் கூடிய எம்எஸ்எம்இ நிதியத்தை உருவாக்கலாம். ஏற்றுமதி மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு ஊக்கத்தொகை வழங்கலாம்.

இந்த நிறுவனங்கள் நடத்தும் ஆய்வு மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்கான செலவினத்தில் 25 முதல் 50 சதவிகித மானியம் அளிக்கலாம். இவற்றுடன் அவற்றின் திட்டச் செலவில் 80 சதவிகிதம் வரை குறைந்த வட்டியில் கடன் வழங்கலாம். இந்த பரிந்துரைகள் பற்றி கருத்து தெரிவித்த மாநில தொழிற்துறை அமைச்சர் சம்பத்,வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது குறித்து ஆராய முதலமைச்சர் ஒரு குழுவை அமைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments