மற்ற நாடுகளை விட இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைவு - WHO வின் தலைமை விஞ்ஞானி சௌம்யா சுவாமிநாதன்
கொரோனா நோய்த்தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்கு இந்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌம்யா சுவாமிநாதன் தெரிவித்தார்.
தேசிய தொழில்நுட்பநாளையொட்டி காணொலி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், கொரோனா நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் மீண்டு வருவதற்கு பல மாதங்கள் மட்டுமல்ல சில ஆண்டுகள் ஆவதற்குக் கூட வாய்ப்புள்ளது என்றார். எனவே, அதற்கேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு தயாராக வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் குறைவாகவே காணப்படுகிறதுஎன்றார்.
Solutions will come from Science. On national technology day, honored to be with @drharshvardhan ji @PrinSciAdvGoI @Ashutos61 @IndiaDST @tdbgoi @RenuSwarup @shekhar_mande on #covid challenges and Indian countermeasures, from diagnostics to digital tools https://t.co/QphIQaUnaY
— Soumya Swaminathan (@doctorsoumya) May 11, 2020
Comments