கொரோனா தொற்றால் வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டவர்களுக்கு அறிவுரை
வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்ட கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ச்சியாக 10 தினங்களுக்கு காய்ச்சல் இல்லையெனில் தனிமையிலிருந்து விடுவித்துக் கொள்ளலாம் என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அத்துறை சார்பில் வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட வழிகாட்டி நெறிமுறையில் கூறியிருப்பதாவது, ((gfx in))வீடுகளில் சுயமாக தனிமைப்படுத்திக் கொண்டவர்கள் 10 தினங்கள் காய்ச்சல் இல்லாது இருக்கும்பட்சத்தில் அறிகுறி தொடங்கிய 17 -வது நாளில் தனிமைப்படுத்தலை முடித்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. அவர்கள் மீண்டும் நோய்த் தொற்று பரிசோதனையை மேற்கொள்ளவேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது.
Comments