மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கோவிட்-19 சிறப்பு கடனுதவி திட்டம் அறிமுகம்-அமைச்சர் செல்லூர் ராஜு
மகளிர் சுய உதவிக்குழுக்களின் அவசர கடன் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், கோவிட்-19 சிறப்பு கடனுதவி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
சென்னை சேத்துப்பட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஊரடங்கின் போது கூட்டுறவுத்துறை சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும் மகளிர் சுய உதவிக்குழுக்களின் அவசர கடன் தேவையை பூர்த்தி செய்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கோவிட் - 19 சிறப்பு கடனுதவி திட்டம் மூலம், தகுதிவாய்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தலா 5000 வீதம் ஒரு குழுவுக்கு ஒரு லட்சம் வரை கடன் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக மதுரை - பரவை, விளாங்குடி, கரிசல்குளம், பெத்தானியாபுரம் ஆகிய பகுதியில் உள்ள 7,000 குடும்பங்களுக்கு நிவாரணமாக அரிசி, காய்கறி, முட்டை, பருப்பு ஆகிய உணவுப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினேன்.#Corona #TNAgainstCorona pic.twitter.com/x59D1SXKDN
— Sellur K Raju (@SellurKRajuoffl) May 12, 2020
Comments