4 வயது குழந்தையின் கண் முன்னே பெற்றோர் கொடூரக் கொலை !

0 15566

கரூர் அருகே நிலத்தகராறில் 4 வயது சிறுமியின் கண் முன்னே, அவளது தாய், தந்தை வெட்டிக் கொல்லப்பட்ட கொடூரம் அரங்கேறியிருக்கிறது.

கரூர் மாவட்டம் மணவாடியை அடுத்த அய்யம்பாளையத்தைச் சேர்ந்த ரங்கநாதன் ஏ.சி. மெக்கானிக்காக வேலை பார்த்து வந்துள்ளார். மனைவி தீபிகா, 4 வயது மகள், மனநிலை பாதிக்கப்பட்ட தாயுடன் வசித்து வந்த ரங்கநாதனுக்கும் அவரது சித்தி மகன்கள் 3 பேருக்கும் நீண்ட நாட்களாக நிலத் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. திங்கட்கிழமை இரவு ரங்கநாதன் வீட்டுக்குள் புகுந்த மர்ம கும்பல், ரங்கநாதனையும் தீபிகாவையும் சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றுள்ளது. அருகில் குடியிருப்புகள் இல்லாத, தோட்டப் பகுதியில் தனியாக அமைந்துள்ள வீடு என்பதால் கொலையானவர்களின் அலறல் சத்தமும் வேறு யாருக்கும் கேட்கவில்லை.

தன் கண்முன்னே அரங்கேறிய பயங்கரத்தை பார்த்து மிரட்சியிலிருந்த சிறுமி, கையில் வைத்து விளையாடிக் கொண்டிருந்தச் செல்போன் மூலம் உறவினருக்கு தகவல் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. விரைந்து வந்த உறவினர்கள், வெள்ளியணை காவல்நிலையத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் தப்பியோடிய மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். நிலத் தகராறில் ரங்கநாதனின் சித்தி மகன்கள் இந்தக் கொலையை செய்திருக்கலாமோ என்ற கோணத்திலும் விசாரணை தீவிரமடைந்துள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments