1300 பணியாளர்களை வேலைநீக்கம் செய்கிறது ஹயாத் ஹோட்டல்
கொரோனாவால் ஏற்பட்ட வர்த்தக இழப்பின் தொடர்ச்சியாக, பணியாளர்கள் 1300 பேரை வேலை நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக பிரபல ஹோட்டல் நிறுவனமான ஹயாத் அறிவித்துள்ளது.
கொரோனா தொற்றின் எதிரொலியாக, ஹோட்டல் துறையில் வரலாறு காணாத வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஹயாத், நிலைமை இயல்பு நிலைக்கு திரும்ப நீண்ட காலம் பிடிக்கும் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் ஆடம்பர ஹோட்டல்கள் உள்ள ஹயாத்தில் 55000 பேர் பணியாற்றுகின்றனர். இவர்களில் 1300 பேர் வரும் ஒன்றாம் தேதி உரிய இழப்பீட்டுடன் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதுநிலை அதிகாரிகளுக்கு சம்பளகுறைப்பு செய்துள்ளதாகவும் ஹயாத் கூறியுள்ளது. கொரோனாவால் சர்வதேச அளவில் ஹோட்டல் துறைக்கு ஒவ்வொரு வாரமும் சுமார் 10,640 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
Comments