கேரளாவில் வருகிற 14ம் தேதி வரை கனமழை தொடரும் என்பதால், 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
கேரளாவில் வருகிற 14ம் தேதி வரை இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை தொடரும் என்பதால், 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் திருவனந்தபுரம், எர்ணாகுளம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக இடி, மின்னலுடன் கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வரும் 14ம் தேதிவரை பலத்த மழை பெய்யும் என்று திருவனந்தபுரம் வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
அதன்படி நாளை வயநாடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களிலும், 14ம் தேதி மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால், 5 மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Comments