ஏழை, எளிய மக்களுக்கு ATM இயந்திரம் மூலம் அரிசி விநியோகம்
இந்தோனேசியாவில் கொரோனா அச்சுறுத்தலால் வேலையிழந்து தவிக்கும் மக்களுக்கு உதவும் பொருட்டு ஏடிஎம் இயந்திரங்கள் மூலம் அரிசி விநியோகம் செய்யப்படுகிறது.
அந்நாட்டில் நோய் தொற்றால் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு ஆயிரம் பேர் வரை உயிரிழந்துள்ளனர். நோய் பரவலை தடுப்பதற்கான ஊரடங்கால் நாடு கடுமையான பொருளாதார சரிவை சந்தித்துள்ள நிலையில், கடந்த 6 வாரங்களில் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளதாக நிதியமைச்சர் ஸ்ரீ முல்யானி இந்திராவதி தெரிவித்துள்ளார். இதன்பொருட்டு, தினசரி கூலி தொழிலாளர்கள், வேலை இழந்தவர்கள், வீடற்றவர்கள், வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிப்பவர்களுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட அரிசி ஏடிஎம் எந்திரங்கள் மூலம் அரிசி அளிக்கப்படுகிறது.
Comments