வெளிமாநில தொழிலாளர்களை அடித்து எட்டி உதைத்த உதவி ஆய்வாளர்

0 2840

கர்நாடகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட வெளிமாநில தொழிலாளர்களை காவல்துறை அதிகாரி அடித்து எட்டி உதைக்கும் வீடியோ வைரலாகிறது.

பெங்களூரு கே.ஜி. ஹல்லி காவல்நிலையம் அருகே உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் திரண்டு சொந்த மாநிலத்துக்கு திருப்பி வைக்கக்கோரி போராட்டம் நடத்தினர். இதைகண்ட காவல் உதவி ஆய்வாளர் ராஜா சாகேப் (Raja Saheb) முதலில் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் ஆத்திரமடைந்து ஒருவரை கன்னத்தில் அறைந்தார். பின்னர் அவரையும் இன்னொருவரையும் உதவி ஆய்வாளர் எட்டி உதைத்தார்.

இதையடுத்து வெளிமாநில தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த வீடியோ வெளியாகி வைரலாக பரவவே, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் துறை ரீதியிலான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments