கொரோனா அறிகுறி இல்லாதோருக்கும் பரிசோதனை நடத்த முடிவு - மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவு
கொரோனா அறிகுறி இல்லாதோருக்கும், மாதந்தோறும் மாவட்ட அளவில் தலா 800 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருவதாலும், அறிகுறி இல்லாதோருக்கும் கொரோனா இருப்பதாலும் மாவட்ட அளவில் பரிசோதனையை தீவிரபடுத்த மத்திய சுகாதார அமைச்சகம் முடிவெடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு மாநிலங்களும் கொரோனா அறிகுறி இல்லாதோருக்கு மாவட்ட அளவில் வாரத்துக்கு 200 பேர் வீதம், மாதத்துக்கு 800 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்த வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.
இந்த பரிசோதனைக்காக மாவட்டந்தோறும் 6 அரசு மருத்துவமனைகள், 4 தனியார் மருத்துவமனைகளை மாநில அரசுகள் தேர்வு செய்து கொள்ள வேண்டுமென்றும் மத்திய சுகாதார அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
Comments