"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
பிரச்சாரம் மூலம் டொனால்ட் ட்ரம்ப் இந்திய மதிப்பில் ரூ.462 கோடி நிதி திரட்டல்
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் டொனால்ட் ட்ரம்பிற்கு 61 மில்லியன் டாலரும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் 60 மில்லியன் டாலரும் நிதி திரட்டி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நவம்பர் மாதம் 3 ஆம் தேதி நடைபெற உள்ள அதிபர் தேர்தலில், டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி சார்பில் பிடன் அதிபர் வேட்பாளராக உள்ளார். இந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தலால் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்கும் பொருட்டு பொதுக்கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்றொரு புறம் பொருளாதார வீழ்ச்சி காரணமாக 3 கோடிக்கும் அதிகமானோர் வேலைழந்துள்ளனர். இந்த நிலையிலும், பிரச்சாரம் மூலம் ஒரே மாதத்தில் இந்திய மதிப்பில் ட்ரம்ப் 462 கோடி ரூபாயும் பிடன் 455 கோடி ரூபாயும் நிதி திரட்டி சாதனை படைத்துள்ளனர்.
Comments