சீனா தரமற்ற முகக் கவசங்களை விற்பனை செய்ததாக கனடா அரசு குற்றச்சாட்டு
சீனா சுமார் 80 லட்சம் தரமற்ற முகக் கவசங்களை விற்றுள்ளதாகத் தெரிவித்துள்ள கனடா பிரதமர், அதற்கு பணம் தரப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.
சீனாவில் இருந்து கனடா சுமார் 1.1 கோடி என்95 மாஸ்க்குகளை வாங்கியுள்ளது. இதில் 10 லட்சம் மாஸ்க்குகள் மட்டுமே உரிய தரத்தில் இருப்பதாகவும், மேலும் 16 லட்சம் மாஸ்க்குகள் ஆய்வில் இருப்பதாகவும் கனடா தெரிவித்துள்ளது. இது தவிர மீதமுள்ள சுமார் 80 லட்சம் மாஸ்க்குகள் தரமற்றவை என கனடா கூறியுள்ளது.
முன்களப் பணியாளர்களான மருத்துவத் துறையினருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு உபகரணங்கள் தரமானவையாக இருக்க வேண்டும் என்றும், உரிய தரத்தில் இல்லாத மாஸ்க்குகளுக்கு பணம் தர முடியாது என்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
Comments