10ம் வகுப்பு தேர்வு அட்டவணை வெளியீடு
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் 1 முதல் ஜூன் 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
கடந்த மார்ச் 24ஆம் தேதி, கடைசித் தேர்வை எழுத முடியாமல்போன பிளஸ் டூ மாணவர்களுக்கு ஜூன் 4ஆம் தேதி தேர்வு நடைபெறுகிறது. 11ஆம் வகுப்பில் விடுபட்ட பாடங்களுக்கான பொதுத் தேர்வு ஜூன் 2ஆம் தேதி நடைபெறுகிறது.
தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள், ஜூன் 1ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நடைபெறும் என அவர் அறிவித்தார்.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் 1ஆம் தேதி மொழிப்பாட தேர்வும், ஜூன் 3ஆம் தேதி ஆங்கிலத் தேர்வும் நடைபெறுகிறது. ஜூன் 5ஆம் தேதி கணிதத் தேர்வும், ஜூன் 6ஆம் தேதி விருப்ப மொழிப்பாடத் தேர்வும் நடைபெறுகிறது. ஜூன் 8ஆம் தேதி அறிவியல் தேர்வும், ஜூன் 10ஆம் தேதி சமூக அறிவியல் தேர்வும் நடைபெறுகிறது. ஜூன் 12ஆம் தேதி தொழிற்பிரிவு தேர்வும் நடைபெறுகிறது.
ஊரடங்கு அறிவிப்பை முன்னிட்டு பேருந்து வசதிகள் தடைபட்டு, கடந்த மார்ச் 24ஆம் தேதி, பிளஸ் டூ கடைசித் தேர்வை 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுத முடியாமல் போனது. அந்த மாணவர்களுக்கு வேதியியல், புவியியல், கணக்குப்பதிவியல் ஆகிய தேர்வுகள் ஜூன் 4ஆம் தேதி நடைபெறும்.
இதேபோல, பிளஸ் 1 மாணவர்களுக்கு, கடந்த மார்ச் 26ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்டது. அந்த தேர்வுகள் ஜூன் 2ஆம் தேதி நடைபெறுகிறது. வேதியியல், புவியியல், கணக்குப் பதிவியில், Vocational Accountancy Theory தேர்வுகள் ஜூன் 2ஆம் தேதி நடைபெறுகிறது.
Comments