பொதுத்துறை வங்கித் தலைவர்களுடன் மத்திய நிதியமைச்சர் ஆலோசனை ஒத்திவைப்பு
பொதுத்துறை வங்கித் தலைவர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கலந்தாய்வு நிகழ்ச்சி திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அமலில் உள்ளது.
இதனால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், பொதுத் துறை வங்கித் தலைவர்களுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காணொலி மூலம் ஆய்வுக் கூட்டத்தை நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் வங்கிகளில் கடன் வாங்குபவர்களின் வட்டி வீதங்களில் மாற்றம், கடன் தள்ளுபடி செய்தல் உள்ளட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்க இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் கலந்தாய்வு கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த கலந்தாய்வு கூட்டத்துக்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
Comments