மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கொரோனா தொற்று இல்லை

0 784
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கொரோனா தொற்று இல்லை

நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மூச்சுத்திணறல் மற்றும் நெஞ்சுவலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதைக் கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு பாதிப்பு இல்லை என்பது தெரியவந்ததையடுத்து அவர் ஐசியு வில் இருந்து தனி வார்டுக்கு மாற்றப்பட்டார்.

மன்மோகன்சிங் விரைவில்பூரண உடல்நலம் பெற பல்வேறு கட்சிகளின் தலைவர்களும், நேபாள பிரதமர் சர்மா ஒலி உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments