உச்சநீதிமன்றத்தில் 70 ஆண்டுகளில் முதன் முறையாக தனி நீதிபதி அமர்வுகள்
உச்சநீதிமன்றத்தில் 70 ஆண்டுகளில் முதன்முறையாக இன்று முதல் தனி நீதிபதி அமர்வுகள் வழக்குகளை விசாரிக்கவுள்ளன.
ஏற்கனவே உச்சநீதிமன்ற வழக்குகளை குறைந்தபட்சம் 2 நீதிபதிகளைக் கொண்ட அமர்வுகள் விசாரிக்க வேண்டும் என்ற விதிகளின்படி சாதாரண வழக்குகளை 2 நீதிபதிகள் அமர்வுகளும், சிறப்பு முக்கியத்துவ வழக்குகளை 3 நீதிபதிகள் அமர்வுகளும் அரசியலமைப்புச் சட்ட வழக்குகளை 5 அதற்கு மேற்பட்ட நீதிபதிகளைக் கொண்ட அமர்வுகளும் விசாரித்து வருகின்றன.
இந்நிலையில் வழக்குகளை தனி நீதிபதிகள் விசாரிக்கும் வகையில் கடந்த ஆண்டு விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதன்படி இன்று முதல் தனி நீதிபதிகள் ஜாமீன் மற்றும் முன் ஜாமீன் தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகள், உயர்நீதிமன்றங்கள், விசாரணை நீதிமன்றங்களிடையே மாநிலம் விட்டு மாநிலம் பணிமாறுதல் உள்ளிட்டவற்றை விசாரிப்பார்கள்.
Comments