துக்க நிகழ்வுகள், மருத்துவத் தேவைக்குச் செல்ல ஒரு மணி நேரத்தில் அனுமதிச் சீட்டு

0 5898
துக்க நிகழ்வு, மருத்துவக் காரணங்களுக்கு வெளியூர் செல்ல அனுமதி கோரும் விண்ணப்பங்களை உடனுக்குடன் பரிசீலித்து ஒரு மணி நேரத்துக்குள் அனுமதிச் சீட்டு வழங்குவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இறந்தவரின் இறுதிச் சடங்குக்குச் செல்லவும், மருத்துவக் காரணங்களுக்குப் பயணம் செய்யவும் விரைவாக அனுமதிச்சீட்டு வழங்கக் கோரித் திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, புஷ்பா சத்தியநாராயணா அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், துக்க நிகழ்வு மற்றும் மருத்துவ அவசரத் தேவைகளுக்குச் செல்ல ஒரு மணி நேரத்துக்குள் அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.

அரசின் விளக்கத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments