உச்சம் தொட்ட உயர்வு உலுக்கும் கொரோனாவால் மிரளும் இந்தியா

0 2743
ஒவ்வொரு நாளும் அச்சத்தை மேலும் உருவாக்கும் வகையில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, இந்தியாவில் கணிசமாக உயர்ந்து வருகிறது. வைரஸ் தொற்று உறுதி ஆனோர் எண்ணிக்கை 67 ஆயிரத்து 500 ஐ தாண்டி விட்டது.

ஒவ்வொரு நாளும் அச்சத்தை மேலும் உருவாக்கும் வகையில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, இந்தியாவில் கணிசமாக உயர்ந்து வருகிறது. வைரஸ் தொற்று உறுதி ஆனோர் எண்ணிக்கை 67 ஆயிரத்து 500 ஐ தாண்டி விட்டது.

இந்தியாவின் ஒவ்வொரு மாநிலங்களிலும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிர்ப்பலியும் நாள்தோறும் உயர்ந்து வருகிறது.

மஹாராஷ்டிராவை பொறுத்தவரை, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22 ஆயிரத்து 171ஆக உயர்ந்துள்ளது. அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 832ஆக உயர்ந்தது.

குஜராத்தில் கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்து 200 - ஐ தாண்ட, அங்கு உயிர்ப்பலி 493 ஆக உயர்ந்தது.

டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 200 ஐ தாண்டி உள்ளது.

ராஜஸ்தானில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்க பலி எண்ணிக்கை 110 ஆக உயர்ந்தது

மத்திய பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு, 3 ஆயிரத்து 600 ஐ தாண்ட, அங்கு உயிரிழப்பு 215 ஆக அதிகரித்தது.

உத்தர பிரதேசத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 500 ஐ நெருங்க, அங்கு 74 பேரை கொரோனா காவு வாங்கி விட்டது.

மேற்கு வங்காளத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை நெருங்க அங்கு ஒரே நாளில் மட்டும் 11 பேர் கொரோனாவுக்கு இரை ஆகி உள்ளனர்.

ஆந்திராவில் ஆயிரத்து 900 பேருக்கு மேலும், பஞ்சாபில் ஆயிரத்து 800 பேருக்கு மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தெலங்கானாவில் கொரோனா பாதிப்பு, ஆயிரத்து 200 ஐ நெருங்குகிறது.

ஜம்மு - காஷ்மீரில் 861 பேரும் கர்நாடகாவில் 858 பேரும் பாதிக்கப்பட ஹரியானா , பீஹார், கேரளா மற்றும் ஓடிசாவிலும் வைரஸ் தொற்று உறுதி ஆனவர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67 ஆயிரத்து 576 ஆக உயர்ந்தது. வைரஸ் தொற்றுக்கு இரை ஆனோர், எண்ணிக்கை 2 ஆயிரத்து 211 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 213 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனது. ஆயிரத்து 559 பேர், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனிடையே, நாடு முழுவதும் சுமார் 20 ஆயிரம் பேர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments