இணையத்தளத்தில் கார் விற்பனை, சேவைகளைத் தொடங்கிய AUDI நிறுவனம்
ஆடி நிறுவனம் இணையத்தளம் வழியாக விற்பனையைத் தொடக்கியுள்ளதுடன், வீட்டிலேயே வந்து காரை வழங்குவதாகவும் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் வாகனத் தொழில்துறையின் செயல்பாடுகளை மாற்றியமைத்துள்ளது. கார் தயாரிப்பு நிறுவனங்கள் இணையத்தளத்திலேயே விற்பனை மற்றும் சேவைகளைப் பெறுவதற்கான வழிமுறைகளை உருவாக்கியுள்ளன.
இந்த வகையில் ஆடி நிறுவனமும் இணையத்தளத்தில் விற்பனை மற்றும் சேவையைத் தொடக்கியுள்ளது. புதிய வாடிக்கையாளர்கள் இணையத்தளத்திலேயே காரின் முழுத் தோற்றத்தையும் கண்டு தேர்வு செய்தால் வீட்டுக்கே கொண்டுவந்து காரை வழங்குகின்றனர்.
இதேபோல் பழைய வாடிக்கையாளர்கள் சேவைக்கு இணையத்தளத்தில் பதிவு செய்தால் வீடுதேடி வந்து காரை எடுத்துச் சென்று பணிகளைச் செய்தபின் வீட்டுக்கே கொண்டுவந்து விடுகின்றனர்.
.@AudiIN buyers can now place orders for new vehicles including checking features and exploring finance options, all from their homeshttps://t.co/i7wG5Jyt2f@htTweets
— HT Auto (@HTAutotweets) May 11, 2020
Comments