ஒரேயொரு ட்வீட்டால் 3 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை இழந்த எலன் மஸ்க்

0 4812
ஒரேயொரு ட்வீட்டால் 3 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்பை இழந்த எலன் மஸ்க், கலிஃபோர்னியாவில் இருந்து கார் தொழிற்சாலையை மாற்றப்போவதாக புதிய ட்வீட்டில் எச்சரித்துள்ளார்.

ஒரேயொரு ட்வீட்டால் 3 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்பை இழந்த எலன் மஸ்க், கலிஃபோர்னியாவில் இருந்து கார் தொழிற்சாலையை மாற்றப்போவதாக புதிய ட்வீட்டில் எச்சரித்துள்ளார்.

டெஸ்லா நிறுவன பங்குகளின் மதிப்பு சந்தையில் மிக அதிகமாக இருப்பதாக, ட்விட்டர் பதிவில்  கடந்த 1ஆம் தேதி எலோன் மஸ்க் குறிப்பிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து, பங்குச்சந்தையில் டெஸ்லா பங்குகளின் மொத்த மதிப்பு 14 பில்லியன் டாலர்கள் அளவுக்கு சரிவைச் சந்தித்தது.

இதில், எலோன் முஸ்க் வசமுள்ள பங்குகளின் மதிப்பு 3 பில்லியன் டாலர்கள் அளவுக்கு குறைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கலிபோர்னியா மாநிலம் ஃபெர்மான்ட் (Fremont) நகரில் உள்ள டெஸ்லா தொழிற்சாலையை அங்கிருந்து மாற்றப்போவதாக எலோன் முஸ்க் எச்சரித்துள்ளார்.

தொழிற்சாலையை இயக்க முடியாமல் உள்ள நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள் என்ற பெயரால் ஆளுநர், அதிபர், அரசமைப்புச் சட்டம் கூறியுள்ளதற்கு மாறாக சுகாதாரத்துறை அதிகாரி செயல்படுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதற்காக டெஸ்லா நிறுவனம் வழக்கும் தொடர்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments