மகாராஷ்டிரத்தின் சில பகுதிகளில் சமூகத் தொற்றாக மாறியதா கொரோனா ?
மகாராஷ்டிரத்தின் சில பகுதிகளில் கொரோனா, சமூகத் தொற்றாக மாறியிருப்பதற்கு சில ஆதாரங்கள் இருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
மகாராஷ்டிரத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 22 ஆயிரத்தை கடந்து, அதிகரித்து வருகிறது. மும்பையில் மட்டும் 12 ஆயிரத்தும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சதுரகிலோமீட்டருக்கு 20 ஆயிரம் பேர் என்ற அளவில் மிக அடர்த்தியாக மக்கள் வசித்து வருவதோடு, நாட்டின் பிற மாநகரங்களோடு ஒப்பிடும்போது மாறுபட்ட சமூக-பொருளாதாரத் தன்மை கொண்டதாக மும்பை உள்ளது.
இதுவே பாதிப்பு அதிகரிப்பிற்கு காரணம் என சுகாதாரத்துறை கண்காணிப்பு அதிகாரி Dr Pradip Awate தெரிவித்துள்ளார்.
மும்பையின் சில பகுதிகளிலும் மாநிலத்தின் சில பகுதிகளிலும் கொரோனா சமூகத் தொற்றாக மாறியிருப்பதற்கு சில ஆதாரங்கள் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
சிற்சில பகுதிகளில் மட்டும் கொத்து கொத்தாக பாதிப்பிருப்பதே இதற்குக் காரணம் என்றும் Dr Pradip Awate தெரிவித்துள்ளார்.
Comments