கொரோனா எதிரொலியாக, மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய குறைப்பு இல்லை : மத்திய நிதி அமைச்சகம்

0 2700
கொரோனா வைரஸ் தாக்கத்தின் எதிரொலியாக, மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய குறைப்பு செய்யும்படி, அரசுக்கு எந்த பரிந்துரையும் அளிக்கப்படவில்லை என்று மத்திய நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் எதிரொலியாக, மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய குறைப்பு செய்யும்படி, அரசுக்கு எந்த பரிந்துரையும் அளிக்கப்படவில்லை என்று மத்திய நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் குறைக்கப்பட இருப்பதாக சில ஊடகங்களில் வெளியான செய்தி தவறானது, அடிப்படை ஆதாரமற்றது என்று மத்திய நிதி அமைச்சகம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.

எந்த பதவியில் இருக்கும் மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தை குறைப்பதற்கும் அரசுக்கு முன்மொழியப்படவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற  போலியான செய்திகளை மக்கள் பொருட்படுத்த கூடாது என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் வலியுறுத்தி இருக்கிறார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments