அதிநவீன எக்ஸ்ரே கருவி பொருத்தப்பட்ட நடமாடும் வாகனங்களை முதலமைச்சர் துவக்கி வைத்தார்
கொரோனாவால் ஏற்படும் நெஞ்சக தொற்று நோய்களை துரிதமாக கண்டறிய, நடமாடும் அதிநவீன எக்ஸ்ரே கருவி பொருத்தப்பட்ட வாகனங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் துவக்கி வைத்தார்.
தலைமைச் செயலகத்தில், சுகாதாரத்துறையின் தேசிய நல வாழ்வு குழுமத்தின் சார்பில் 5 கோடியே 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 14 எக்ஸ்ரே வாகனங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக துவக்கி வைக்கும் அடையாளமாக 5 வாகனங்களை அவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த நடமாடும் அதிநவீன எக்ஸ்ரே கருவி பொருத்தப்பட்ட வாகனங்களின் மூலம் நோயாளிகளின் இருப்பிடத்திற்கே சென்று எக்ஸ்ரே எடுப்பதுடன், அப்பரிசோதனை முடிவினை மருத்துவர்கள் துரிதமாக கண்டறிந்து சிகிச்சை அளித்திட இயலும்.
பிற நெஞ்சக நோய்களான ஆஸ்துமா, நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்கள், தொழிற் சார்ந்த நுரையீரல் நோய்களான சிலிக்கோசிஸ், பாகோசிஸ் போன்றவற்றை ஆரம்பத்திலேயே கண்டறியவும் இவ்வாகனம் பயன்படுத்தப்படும்.
இன்று தலைமைச் செயலகத்தில், ரூ.5.48 கோடி மதிப்பில் நெஞ்சக தொற்று நோய் மற்றும் கோவிட் -ஆல் ஏற்படும் நெஞ்சக தொற்று நோய்களை துரிதமாக கண்டறிய "நடமாடும் அதிநவீன எக்ஸ்ரே கருவிகள் பொருந்தப்பட்ட 14 வானங்கள்" சேவையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தேன். #COVID #TNGovt pic.twitter.com/xotbUXD1UP
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) May 11, 2020
Comments