புலம்பெயர் தொழிலாளர்களை ஏற்றிச் செல்ல ஷ்ராமிக் சிறப்பு ரயில்களில் 1200 பேருக்கு பதில் 1700 பயணிகள் செல்ல அனுமதி
அதிக அளவில் புலம்பெயர் தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் வகையில், ஷ்ராமிக் சிறப்பு ரயில்களுக்கான வழிகாட்டுதல்களில் ரயில்வே துறை திருத்தம் உள்ளது.
கொரோனா அச்சுறுத்தலால் வெளிமாநிலங்களில் சிக்கிய புலம்பெயர் தொழிலாளர்கள், சொந்த ஊருக்கு திரும்புவதற்கு ஏதுவாக கடந்த 1 ஆம் தேதி முதல் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ஆயிரத்து 200 பேர் வரை அழைத்துச் சென்ற ஷ்ராமிக் சிறப்பு ரயில் இனிமேல், ஆயிரத்து 700 பேருடன் இயக்கப்பட உள்ளது.
மேலும், புலம்பெயர் தொழிலாளர்கள் சென்று சேரும் கடைசி நிறுத்தம் தவிர்த்து கூடுதலாக 3 நிறுத்தங்கள் வழங்கப்பட உள்ளன.
குறைந்த ரயில்களை இயக்க அனுமதித்துள்ள மாநிலங்கள், அதிகமான தொழிலாளர்களைப் பயணிக்க அனுமதிக்க வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அறிவுறுத்தியுள்ளார்
We have allocated over 1,200 trains with which we can easily run 300 ’Shramik Special’ trains everyday, so that all migrants can reach their destination safely, quickly and comfortably.
— Piyush Goyal (@PiyushGoyal) May 11, 2020
Comments