அமெரிக்க தலைவர்களின் குற்றச்சாட்டுக்குச் சீனா மறுப்பு

0 2814
எல்லோரையும் எல்லாக் காலத்திலும் முட்டாளாக்க முடியாது என்கிற ஆபிரகாம் லிங்கனின் கூற்றை மேற்கொள் காட்டி அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளுக்குச் சீனா மறுப்புத் தெரிவித்துள்ளது.

எல்லோரையும் எல்லாக் காலத்திலும் முட்டாளாக்க முடியாது என்கிற ஆபிரகாம் லிங்கனின் கூற்றை மேற்கொள் காட்டி அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளுக்குச் சீனா மறுப்புத் தெரிவித்துள்ளது.

சீனாவின் ஊகானில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் இருந்தே கொரோனா வைரஸ் பரவியதாக அமெரிக்க அதிபர், வெளியுறவு அமைச்சர் உள்ளிட்ட தலைவர்கள் சந்தேகம் எழுப்பி வருகின்றனர்.

இவ்வாறான 24 குற்றச்சாட்டுகளை மறுத்துச் சீனா 30 பக்கங்களில் மிக நீண்ட பதிலை அளித்துள்ளது. அதில், "நீங்கள் எல்லாக் காலத்திலும் சிலரை முட்டாளாக்கலாம்.

எல்லோரையும் சில நேரத்தில் முட்டாளாக்கலாம், ஆனால் உங்களால் எல்லோரையும் எல்லாக் காலத்திலும் முட்டாளாக்க முடியாது" என்கிற அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கனின் கூற்றை மேற்கோள் காட்டியுள்ளது.

ஊகானில் வைரஸ் உறுதி செய்யப்படுமுன்பே அமெரிக்கர்களுக்கு வைரஸ் தொற்று இருந்ததாக ஊடகங்களில் வந்த செய்திகளையும் குறிப்பிட்டுள்ளது. கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்படவில்லை என்பதற்கான சான்றுகளையும் அதில் குறிப்பிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments