கொரோனாவை வீரியம் இழக்கச் செய்யும் காப்பர் வடிகட்டி உருவாக்கும் முயற்சிக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி
கொரோனா வைரஸை வீரியம் இழக்கச் செய்யும் காப்பர் வடிகட்டியை உருவாக்கும், மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிரியர்களின் முயற்சிக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை 25 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளது.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் வேதியியல் பேராசிரியர் மயில்முருகன், வைராலஜி பேராசிரியர் கோபால் மற்றும் தேனி அரசு மருத்துவமனை மருத்துவர் அமுதன் அடங்கிய குழு இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
கொரோனா வைரஸை வீரியம் இழக்கச் செய்யும் காப்பர் வடிகட்டி வெற்றிகரமாக உருவாக்கப்பட்டு விட்டால், முகக் கவசம், பேருந்துகள், விமானங்கள், ஏசி வெண்டிலேட்டர்களில் பொருத்தி பயன்படுத்தலாம் என பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments