வெளிமாநில தொழிலாளர்கள் தங்களின் முகாம்களிலேயே தங்கியிருக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

0 4536

வெளிமாநில தொழிலாளர்களை ரயில்கள் மூலம் அவரவர் மாநிலங்களுக்கு ஒருவார காலத்திற்குள் அனுப்பிவைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதால் முகாம்களிலேயே தங்கியிருக்குமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளி மாநிலங்களிலிருந்து வந்து பணிபுரியும் தொழிலாளர்களை விருப்பத்தின் அடிப்படையில், அவரவர் மாநிலங்களுக்கு, சம்மந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியுடன், படிப்படியாக அனுப்பிவைக்க தமிழக அரசு அனைத்துவிதமான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இதுவரை 9 ஆயிரம் வெளிமாநில தொழிலாளர்கள், சம்மந்தப்பட்ட மாநிலங்களின் ஒப்புதலுடன் 8 ரயில்களில் அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மீதமுள்ள வெளிமாநில தொழிலாளர்களும் சம்மந்தப்பட்ட மாநிலங்களின் ஒப்புதலுடன் ரயில்கள் மூலம் அவரவர் மாநிலங்களுக்கு ஒருவார காலத்திற்குள் அனுப்பிவைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, அதுவரை வெளிமாநில தொழிலாளர்கள் முகாம்களிலேயே தங்கியிருக்குமாறு முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments