பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுடன் நிதியமைச்சர் கலந்துரையாடல் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு
பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காணொலியில் இன்று நடத்தவிருந்த கலந்துரையாடல் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காணொலியில் கலந்துரையாடத் திட்டமிட்டிருந்தார். அப்போது நிதியளிப்பு, கடன் வழங்கல், வட்டிவிகிதக் குறைப்பை வாடிக்கையாளருக்கு வழங்குதல், ஊரடங்குக்குப் பின் பொருளாதார நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதில் வங்கிகளின் பங்கு ஆகியவை பற்றிப் பேசத் திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்தக் கலந்துரையாடல் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் எந்த நாளில் கலந்துரையாடல் நடைபெறும் என்பது விரைவில் அறிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
Comments