உ.பி முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் மருத்துவமனையில் அனுமதி

0 1272

உத்தர பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சி நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் உடல்நலக் கோளாறால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை இரவு வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டதை அடுத்து லக்னோவிலுள்ள மேதாந்தா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே கடந்த 6ம் தேதி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அடுத்த 5 நாட்களுக்குள் முலாயம் சிங் யாதவ் 2வது முறையாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். அவர் பூரண நலன் பெற வேண்டும் என தாம் பிரார்த்திப்பதாக மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments