ஊரடங்கு காலத்தில் ஆண் நண்பருடன் ஊர் சுற்றியதால் நடிகை பூனம் பாண்டே கைது

0 5961

ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறியதாக பாலிவுட் நடிகை பூனம் பாண்டேயை மரீன் டிரைவ் காவல்நிலைய போலீசார் கைது செய்தனர்.

அவர் தனது ஆண் நண்பருடன் எந்தவிதக் காரணமுமின்றி ஊருக்குள் சுற்றித் திரிந்ததாக போலீசார் தெரிவித்தனர். பூனம் பாண்டே பயன்படுத்திய பிஎம்டபிள்யு கார் ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

சட்டத்தை மதிக்காதது, நோய்த் தொற்று பரவுவதற்கு காரணமாகும் வகையில் பொறுப்பில்லாமல் இருந்தது என்று பல்வேறு பிரிவுகளில் பூனம் பாண்டே மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கிரிக்கெட்டில் இந்தியா வென்றால் நிர்வாணமாக காட்சியளிப்பேன் எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்திய பூனம் பாண்டே, அவ்வப்போது சமூக ஊடகங்களில் அதிரடியான படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். ஆண் நண்பருடன் மரீன் டிரைவில் சுற்றிய வீடியோ அவருக்கு இப்போது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments