காஷ்மீரில் தீவிரவாதிகள் இன்று தாக்குதல் தொடுக்கலாம் என்ற உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து உச்சக்கட்ட பாதுகாப்பு படைகள் குவிப்பு
காஷ்மீரில் தீவிரவாதிகள் இன்று தாக்குதல் தொடுக்கலாம் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டு படைகள் குவிக்கப்பட்டுள்ளனர்.
உள்ளூர் காஷ்மீர் மக்களைப் பயன்படுத்தி ஆங்காங்கே ராணுவ முகாம்களில் குண்டுகளை வெடிக்க ஜெய்ஷே முகமது தீவிரவாத இயக்கம் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியானது. மே 11ம் தேதி தாக்குதலுக்கு திட்டமிடப்பட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளதால், அப்பகுதியில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் ஜெய்ஷே முகமது இயக்கத்தின் தலைவன் ரியாஸ் நெய்கூ பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து புதிய தலைவனாக கைசி ஹைதர் தேர்ந்தெடுக்கப்பட்டான். தீவிரவாத தாக்குதல் குறித்து உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததையடுத்து, காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Comments