மகாராஷ்டிர மாநில மேலவைக்கு போட்டியின்றி தேர்வாகிறார் உத்தவ் தாக்கரே
மகாராஷ்ட்ரா முதலமைச்சர் உத்தாவ் தாக்கரேவுக்கு எதிரான வேட்பாளரை காங்கிரஸ் கட்சி திரும்பப் பெற்றுக் கொண்டதையடுத்து, அவர் போட்டியின்றி மேலவைக்குத் தேர்வு செய்யப்படுகிறார்.
தாக்கரே போட்டியின்றி தேர்வு செய்யப்படாவிட்டால் அவர் போட்டியிடவே விரும்பவில்லை என்று சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்திருந்தார். ஆளும் கூட்டணி அரசின் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது. இதனால் தாக்கரேவுக்கு போட்டி உருவானது.
ஆனால் அந்த இரண்டு வேட்பாளர்களில் ஒருவரை திரும்பப் பெறுவதாக காங்கிரஸ் அறிவித்தது. மே 21ம் தேதி 9 மேலவைத் தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெற உள்ளது.இத்தேர்தலில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு 5 இடங்களிலும் பாஜகவுக்கு நான்கு இடங்களிலும் வெற்றி வாய்ப்பு உள்ளது.
Comments