உலகில் முதல் முறையாக சீனாவில் கொரோனா நோயாளிக்கு, நுரையீரல் மாற்று சிகிச்சை
உலகில் முதல் முறையாக, சீனாவில், மூளைச்சாவு அடைந்தவரின் நுரையீரல் தானமாக பெறப்பட்டு, கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு பொருத்தப்பட்டது.
கொரோனாவின் தாயகமாக கருதப்படும் வூகான் நகரை சேர்ந்த, ஸ்வை ஜிகியாங் என்ற 65 வயது நபர், நுரையீரலில் ஏற்பட்ட இழைநார் வளர்ச்சியால், 2 நுரையீரல்களும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு, மூச்சு விட சிரமப்பட்டதை தொடர்ந்து, அவருக்கு 60 நாட்களாக செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.
பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து, வரவழைக்கப்பட்ட சிறப்பு மருத்துவர்கள் மூலம், 8 மணி நேரம் நடைபெற்ற நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையை தொடர்ந்து, புதிதாக பொருத்தப்பட்ட நுரையீரல்கள் சீராக செயல்படத் தொடங்கியதால், அவர் தற்போது பூரண குணமடைந்துள்ளார்.
Comments