பிஎஸ்எப் வீரர்கள் மேலும் 18 பேருக்கு கொரோனா நோய் பாதிப்பு
இந்திய எல்லை பாதுகாப்புப் படையை சேர்ந்த மேலும் 18 வீரர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் அந்நோய் வேகமாக பரவி வருகிறது.
பிஎஸ்எப் எனப்படும் இந்திய எல்லை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 258 பேருக்கு கொரோனா நோய் நேற்று வரை உறுதியாகியிருந்தது.
இந்நிலையில் புதிதாக மேலும் 18 பேருக்கு நோய் கண்டறியப்பட்டுள்ளது.
அதாவது திரிபுரா மாநிலத்தில் பிஎஸ்எப் வீரர்கள் 16 பேருக்கும், டெல்லியில் 2 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இந்திய எல்லை பாதுகாப்புப் படையில் கொரோனா நோய் பாதித்தோரின் எண்ணிக்கை 276ஆக அதிகரித்துள்ளது.
Comments