பொதுத்துறை வங்கித் தலைவர்களுடன் நாளை நிதியமைச்சர் கலந்துரையாடல்

0 2373
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்களன்று பொதுத்துறை வங்கிகளின் தலைமைச் செயல் அலுவலர்களுடன் காணொலியில் கலந்துரையாடுகிறார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்களன்று பொதுத்துறை வங்கிகளின் தலைமைச் செயல் அலுவலர்களுடன் காணொலியில் கலந்துரையாடுகிறார்.

கொரோனாவால் பொருளாதாரப் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், நெருக்கடியில் சிக்கியுள்ள நிறுவனங்களுக்குக் கடன் வழங்குவதற்காக ரிசர்வ் வங்கி ஊக்குவிப்புத் திட்டங்களை அறிவித்துள்ளது.

இந்நிலையில் பொதுத்துறை வங்கிகளின் தலைமைச் செயல் அலுவலர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்களன்று காணொலியில் கலந்துரையாடுகிறார். கடன் வட்டி விகிதக் குறைப்பு,  கடனளிப்பு, கடன் தள்ளி வைப்பு ஆகியவை குறித்து அவர்களிடம் கேட்டறிவார் எனக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments