அடுத்தடுத்து அதிரடி காட்டும் கொரோனா உயரும் பாதிப்பு : மிரளும் மக்கள்

0 2782
நாடு முழுவதும் ஒரே நாளில் 3 ஆயிரத்து 277 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி,பாதிப்பு 63 ஆயிரத்து 500ஐ தாண்டி விட்டது. கொரோனா காவு வாங்கியோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 113ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் ஒரே நாளில் 3 ஆயிரத்து 277 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி,பாதிப்பு 63 ஆயிரத்து 500ஐ தாண்டி விட்டது. கொரோனா காவு வாங்கியோரின்
எண்ணிக்கை 2 ஆயிரத்து 113ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவின் ஒவ்வொரு மாநிலங்களிலும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிர்ப்பலியும் நாள்தோறும் உயர்ந்து வருகிறது.

மஹாராஷ்டிராவை பொறுத்தவரை, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக் கை 20 ஆயிரத்தை தாண்டி விட்டது. அங்கு உயிரிழப்பு, 779 ஆக உயர்ந்தது.

குஜராத்தில் கொரோனா பாதிப்பு 7ஆயிரத்து 800 - ஐ தாண்ட, டெல்லியில் 7 ஆயிரத்தை நெருங்குகிறது

ராஜஸ்தானில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 700 ஐ தாண்ட, பலி எண்ணிக்கை 107 ஆக உயர்ந்தது

மத்திய பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு, 3 ஆயிரத்து 600 ஐ தாண்ட, அங்கு உயிரிழப்பு 215 ஆக அதிகரித்தது.

உத்தர பிரதேசத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 400 ஐ நெருங்க, அங்கு 74 பேரை கொரோனா காவு வாங்கி விட்டது.

ஆந்திராவில் கொரோனா பாதிப்பு ஆயிரத்து 900 ஐ தாண்ட, மேற்கு வங்காளத்தில் ஆயிரத்து 786 பேரும், தெலங்கானா வில் ஆயிரத்து 163 பேரும் பாதிக்கப்பட்டு
உள்ளனர்.

பஞ்சாபில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்து 700 ஐ தாண்டி உள்ளது.

கர்நாடகாவில் 847 பேரும், ஜம்மு - காஷ்மீரில் 836 பேரும் பாதிக்கப்பட ஹரியானா , பீஹார், கேரளா மற்றும் ஓடிசாவிலும் வைரஸ் தொற்று உறுதி ஆனவர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 63 ஆயிரத்து 549 ஆக உயர்ந்தது. வைரஸ் தொற்றுக்கு இரை ஆனோர், எண்ணிக்கை 2 ஆயிரத்து 113 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 277 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆக, ஓரே நாளில் மட்டும் 127 பேர் கொரோனாவுக்கு இரை ஆகி உள்ளனர். அதே நேரம்
19 ஆயிரம் பேர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments