கோயம்பேட்டைச் சுற்றியுள்ள குடியிருப்புகளில் புதிதாக 42 பேருக்கு கொரோனா
சென்னை கோயம்பேட்டில் புதிதாக 42 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் வணிகர்கள், தொழிலாளர்கள் சிலருக்குக் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டதால் பழச்சந்தை மாதவரத்துக்கும், காய்கறிச் சந்தை திருமழிசைக்கும் மாற்றப்பட்டன.
சந்தையைச் சுற்றியுள்ள குடியிருப்புகளில் கொரோனா உள்ளவர்களைக் கண்டறிந்து சிகிச்சைக்குச் சேர்த்ததுடன், அவர்களுடன் தொடர்புடையோருக்குச் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் இன்று கோயம்பேட்டில் பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் 5 பேர் உட்படப் புதிதாக 42 பேருக்குக் கொரோனா இருப்பது சோதனையில் தெரியவந்துள்ளது.
இதனால் கோயம்பேட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 300ஐத் தாண்டியுள்ளது. கோயம்பேடு சந்தையில் இருந்து வெளிமாவட்டங்களுக்குச் சென்ற தொழிலாளர்கள் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Comments